1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 மே 2018 (18:19 IST)

ஆளூம் யோக்யதை இல்லாத அரசு: பொன்னார் காட்டம்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட ஆலையை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்து கடந்த மூன்று நாட்களாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது மெற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளால் அமைதி நிலை திரும்பியுள்ளது. முடக்கி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை நெல்லை மற்றும் கன்னியாகுமாரி மாவடங்களில் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையில், தமிழக அரசு மீது விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவர் கூறியது பின்வருமாறு, 
 
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கூறினேன். அப்போது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? 99 நாட்களாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் அமைதியாக நடைபெற்றது. 100 வது நாளில் வன்முறை ஏற்பட யார் காரணம்? 
 
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தீய சக்திகள் உள்ளே நுழைந்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தினர். அவர்களைப் பொறுத்தவரை இது சோதனை ஓட்டம்தான். இன்னும் நிறைய நடக்கும். இவர்கள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? 
 
ஆள்வதற்கு தமிழக அரசுக்கு யோக்யதை இல்லை. ஆகையால் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என தமிழக அரசை ஆள்பவர்களுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.