செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2019 (14:02 IST)

ரஜினி மூளை இல்லாத நடிகர்… மோடிதான் அவரது இயக்குனர் – சீமான் ஆவேசம் !

பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஆதரித்துள்ள ரஜினியை மூளையற்றவர் என சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளார்களுக்காக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது நாகை மாவட்டத்தில் முகாமிட்டுள்ள சீமான் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக பரப்புரை செய்து வருகிறார்.

பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது ரஜினியை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார் சீமான். அப்போது ‘ பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஏதாவது புதிதாக சொல்லப்பட்டுதா ?.. இல்லை.. இருந்தும் ரஜினி அதை ஆதரிக்கிறார் என்றால் என்ன அர்த்தம். ரஜினி வெறும் நடிகர். மோடிதான் இயக்குனர். நடிகர்கள் இயக்குனர்கள் சொல்வதை செய்வார்கள். ரஜினி சொந்தமாக சிந்திக்க மூளை இல்லாத நடிகர்’ எனக் கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு ஆணையம் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதை வரவேற்கிறேன் எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.