1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2023 (14:16 IST)

பாஜக தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்: பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜக தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என்றும், பாஜக ஏற்கனவே தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று பாஜகவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் கூட்டம் முடிந்த பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாஜக ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 5 மாநில தேர்தல் வருகிறது, அதில் பாஜக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அதிமுக, பாஜக கூட்டணி முறிவால் எந்த பின்னடைவும் இல்லை, பாஜக ஏற்கனவே தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது, வரும் தேர்தலில் பாஜக ஆச்சரியமளிக்கும் வகையில் வெற்றிகளை பெறும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்,.

 முன்னதாக பாஜகவின் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் அதிமுக ஒரு தனி அணி அமைக்க முயற்சி செய்து வருகிறது. அதேபோல் பாஜக தலைமையில் ஒரு தனி அணி அமைக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது.  இந்த இரு அணிகளிலும் இணையும் அரசியல் கட்சிகள்  எவை எவை என்பது போக தான் தெரியும்.

அதுமட்டுமின்றி திமுக கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகளும் அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் மறைமுகமாக அதிமுகவுடன் பேசிக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran