நாகா்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயிலை தினமும் இயக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை.!
நாகா்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயிலை தினமும் இயக்க வேண்டும் என பயணிகள் நல சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு பகல்நேர வந்தே பாரத் வாரத்துக்கு 4 நாள் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை நிரந்தர ரயிலாக அறிவித்து தினசரி ரயிலாகவும் மாற்றம் செய்ய வேண்டும்.
கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இருவழிப் பாதை பணிகள் நிறைவடைந்த நிலையில், கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி விரைவு ரயில் வேகத்தை அதிகப்படுத்தி கால அட்டவணை மாற்றம் செய்ய வேண்டும்.
அதன்படி இந்த ரயில் தற்போது இயங்கும் மாலை 5.50 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படுவதை மாற்றம் செய்து 6.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும்.
நாகர்கோவில் - பெங்களூரு ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி அதிவிரைவு ரயிலாக மாற்றம் செய்ய வேண்டும். இது போன்ற பல்வேறு அறிவிப்புகளை வரும் ஜூலை மாதம் வெளியிடும் ரயில் கால அட்டவணையில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Edited by Siva