வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 17 அக்டோபர் 2018 (20:22 IST)

ஆண்கள் 'மீ டூ' தொடங்கினால் என்ன ஆகும் என்று தெரியுமா? பொன்.ராதாகிருஷ்ணன்

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட 'மீ டூ' ஹேஷ்டேக் உலகம் முழுவதும் பரவி தற்போது தமிழ் திரையுலகை மையம் கொண்டுள்ளது. இந்த மீடூவில் ஒவ்வொரு நாளும் ஒரு பிரபலம் மீது குற்றம் சாட்டப்பட்டு வருவதால் அடுத்தது யார் பெயர் வரும் என்ற எதிர்பார்ப்பும் பயமும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ''மீடூ என்பது வக்கிர புத்தியுடைய பெண்களின் எண்ணம். இதேபோல ஆண்கள் ஆரம்பித்தால் என்னவாகும்? நமது வீட்டு பெண்கள் நடமாட முடியுமா?'' என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மீடூ குற்றச்சாட்டை வைரமுத்து மீது கூறிய சின்மயி, பாஜக ஆதரவாளர் என்று கூறப்பட்டாலும், மீடூவை ஆரம்பம் முதலே பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சபரிமலை பிரச்சனை குறித்து கருத்து கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், 'சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைய பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது, அவர்களுடைய நம்பிக்கை தொடர்பான விஷயம் என்றும், சபரிமலைக்கென்று உள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.