திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (13:45 IST)

”ஆறு அறிவு இருக்கிறது, அதனால் ஆறு மொழிகள் படிக்கவேண்டும்”.. பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

நேற்று ஹிந்தி தினத்தை முன்னிட்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவின் ஒரே மொழி ஹிந்தி தான் என கூறியதை தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று நாடு முழுவதும் ஹிந்தி தினம் கொண்டாடப்பட்ட நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டில் அனைவரும், தங்கள் தாய் மொழியை கற்பது போல ஹிந்தி மொழியையும் கற்க வேண்டும். ஹிந்தி தான் இந்தியாவை உலகம் முழுவதும் அடையாளப்படுத்தும் மொழி” என கூறினார். இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவுத்து வந்தனர்.

தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, குஜராத், வங்காளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் #StopHindiImposition என்ற ஹிந்தி எதிர்ப்பு ஹேஷ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகியது.

இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், சமஸ்கிரதத்தை விடவும் பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பல முறை கூறியுள்ளார். மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது போல், ஆறு மொழிகள் கற்றுக்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார். இந்த கருத்துக்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.