1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:04 IST)

விஷாலின் ‘சக்ரா’ படத்திற்கு மீண்டும் பிரச்சனை: தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

விஷால் நடித்த ‘சக்ரா’ திரைப்படம் ஏற்கனவே பல்வேறு சிக்கல்களை சந்தித்து, வரும் 19ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ‘சக்ரா’ படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது 
 
விஷால் நடிப்பில் எம்எஸ் ஆனந்தன் இயக்கிய ‘சக்ரா’ திரைப்படம் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்தது. இந்த நிலையில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை உத்தரவு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தங்களிடம் ஒப்பந்தம் செய்த கதையை விஷாலை வைத்து படமாக்கி உள்ளதாக இயக்குனருக்கு எதிராக டிரைடன்ட்ஸ் உரிமையாளர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் எம்எஸ் ஆனந்தன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக வரும் 19ஆம் தேதி ‘சக்ரா’ திரைப்படம் வெளியாகாது என்று தெரிகிறது