திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (09:43 IST)

பொள்ளாச்சி ஓட்டலை புகழ்ந்து டுவிட் போட்ட காஜல் அகர்வால்!

பொள்ளாச்சி ஓட்டலை புகழ்ந்து டுவிட் போட்ட காஜல் அகர்வால்!
தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்தார் என்பதும் திருமணத்திற்கு பின்னர் மாலத்தீவுக்கு தேனிலவு சென்று திரும்பிய காஜல் அகர்வால் தற்போது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு உள்ளார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சமீபத்தில் காஜல் அகர்வால் தனது கணவருடன் பொள்ளாச்சி சென்ற நிலையில் அங்கு வழக்கமாக சாப்பிடும் மெஸ் ஒன்றில் சாப்பிட்டது குறித்த தனது அனுபவத்தை தெரிவித்துள்ளார் 
 
பொள்ளாச்சியில் சாந்தி மெஸ் என்ற பெயரைக் கொண்ட மெஸ்ஸில் சாந்தி அக்கா மற்றும் பாலகுமார் அண்ணா ஆகிய இருவரும் உணவோடு சேர்ந்து அன்பையும் எங்களுக்கு தந்தார்கள். அவர்களுடைய உணவு மிகவும் அருமையாகவும் சுவையாகவும் இருந்தது. கடந்த 27 ஆண்டுகளாக அவர்கள் இந்த ஹோட்டலை நடத்தி வருகின்றனர். நான் அந்த ஓட்டலின் ஒன்பது வருட ரெகுலர் கஸ்டமர் என்று கூறியுள்ளார்
 
இதனை அடுத்து காஜல் அகர்வால் சாப்பிட்ட அந்த ஹோட்டல் எங்கே இருக்கிறது என பொள்ளாச்சியில் உள்ளவர் தேடத் தொடங்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது