1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (12:09 IST)

கொங்கு மண்ணில் கொடூரம்: கொந்தளித்த விஜய்: வேரறுக்க வேண்டுகோள்!!!

1000 பெண் தெய்வங்களை வணங்கும் கொங்கு மண்ணில் நடந்த கொடூரத்தில் தொடர்புடைய கொடூரர்களை வேரறுக்க வேண்டும் என பாடலாசிரியர் பா.விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200 பெண்களை மிரட்டி  பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும், மக்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
ஏற்கனவே சின்மயி, குஷ்பு, ஜி.வி.பிரகாஷ், சித்தார்த், சிபிராஜ் ஆகியோர் இந்த விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் பாடலாசிரியர் பா.விஜய் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
 
அதில் 1000 பெண் தெய்வங்களை வணங்கும் கொங்கு மண்ணில் நடந்த இந்த கொடூர சம்பவம் மனதை பதைபதைக்க வைக்கிறது. வழக்கம்போல் குற்ரவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பதிலாக பொள்ளாச்சி மண்ணில் வைத்து அரபு நாடுகளில் செய்வது போல மக்கள் முன்னிலையில் அவர்களை தூக்கிலிட வேண்டும். இவர்களை மாதிரியான ஆட்களை வேரறுக்க வேண்டும் என ஆவேசமாக கூறினார்.