வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2024 (11:25 IST)

ராமரை பிரதமர் மோடி இதுவரை பின்பற்றியதே இல்லை: சுப்பிரமணியன் சுவாமி

Subramanian Swamy
கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு நாள் கூட பிரதமர் மோடி ராமரை பின்பற்றியதில்லை என்று பாஜக பிரபலம் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 
 
இன்று அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து பிரதமர் மோடி அதில் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை அவர் நேரில் காண உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிரதமர் மோடி ராமர் கோயில் விழாவில் கலந்து கொள்வது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை செய்து வரும் நிலையில் அவரது சொந்த கட்சியில் உள்ள சுப்பிரமணியன் சாமியும் விமர்சனம் செய்துள்ளார். 
 
அயோத்தி ராமர் கோயில் பூஜையில் மோடியின் பிரதமர் என்ற அந்தஸ்து பூஜ்ஜியம் தான் என்றும் அவர்  ஒரு சாதாரண மனிதராகத்தான் அங்கு இருப்பார் என்றும் தெரிவித்தார். 
 
மேலும்  பிரதமர் மோடி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ராமரை இதுவரை பின்பற்றியது இல்லை என்றும் அது மட்டும் இன்றி கடந்த 10 ஆண்டுகளில் அவர் ராம ராஜ்யத்தின் படி பிரதமராக நடக்கவில்லை என்றும் தெரிவித்தார். ராமர் கொள்கையை பிரதமர் மோடி தனது மனைவியுடன் கூட காட்டவில்லை என்றும் அவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran