1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2024 (19:02 IST)

அதிமுக பேனர் விழுந்து பெண் காயம்!

accident
எடப்பாடி பழனிசாமியை வரவேற்க சாலையில் வைக்க வேண்டி கொண்டு வரப்பட்ட பேனர் சரிந்து, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது விழுந்தது. இளம்பெண் கீர்த்தனாவுக்கு லேசான காயமும், காலில் எழும்பு முறிவும் ஏற்பட்டது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க சாலையில் வைக்க வேண்டி கொண்டு வரப்பட்ட பேனர் சரிந்து, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது விழுந்தது.

இதில், இளம்பெண் கீர்த்தனாவுக்கு லேசான காயமும், காலில் எழும்பு முறிவும் ஏற்பட்டது. உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து பற்றி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.