1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated: வியாழன், 13 ஜனவரி 2022 (18:16 IST)

கொரோனா பரவல் எதிரொலி: போலியோ சொட்டு மருந்து தேதி மாற்றம்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது. 
 
இந்தியாவில் போலியோ நோயை ஒழிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23ஆம் தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் இதில் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படும் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஜனவரி 23ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது