1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 5 நவம்பர் 2021 (10:21 IST)

நாளை மெகா தடுப்பூசி மையம் கிடையாது: தேதி மாற்றம்!

நாளை தமிழகம் முழுவதும் எட்டாவது மெகா தடுப்பூசி மாதம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
 
இதுவரை 7 பேர் தடுப்பூசி மெகா மையங்கள் நடைபெற்ற நிலையில் நாளை எட்டாவது தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை நடைபெறும் தடுப்பூசி மையம் வரும் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
மேலும் வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தீபாவளி கொண்டாட பெரும்பாலான மக்கள் சொந்த ஊர் சென்று இருப்பதால் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.