1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2022 (12:12 IST)

துப்பாக்கியை தூக்கிய காவலர் சஸ்பெண்ட்! – தூத்துக்குடி துப்பாக்கிசூடு அதிரடி நடவடிக்கை!

Tutucorin Gun shoot
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய காவலர்களை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 9 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் துப்பாக்கிச்சூடு குறித்த விரிவான விசாரணை மேற்கொண்டு சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.


இந்த அறிக்கையில் வெளியான பல தகவல்கள் பெரும் அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தன. முக்கியமாக காவலர்களுக்கு துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டது, காவலர் உடுப்பு இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தியது, நவீன துப்பாக்கியை பயன்படுத்தியது என பல்வேறு விஷயங்கள் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், அருணா ஜெகதீசனின் அறிக்கையை முன்வைத்து துப்பாக்கிசூட்டில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் திருமலை மற்றும் காவலர்கள் சதீஷ், சங்கர், சுடலைக்கண்ணு ஆகியோரை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Edited By Prasanth.K