செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (10:52 IST)

சென்னையில் மழைநீரில் மின்சாரம் தாக்கி காவலாளி பலி!

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பெய்துள்ள கனமழையால் பல பகுதிகளில் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்சென்னை மந்தைவெளி பஸ் டிப்போ சிக்னல் அருகே தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் தாக்கி காவலாளி பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தேங்கிய மழைநீரில் நடந்துவந்தபோது அருகில் உள்ள மின்பெட்டியிலிருந்து மின்சாரம் கசிந்ததில் காவலாளி சக்திவேல் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கிறது.