திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (09:22 IST)

அதிமுக போஸ்டர்களை கிழித்து எறிந்த போலீஸ்!? உதயநிதிக்கு எதிராக ட்ரெண்ட் செய்யும் அதிமுக! – என்ன நடக்குது?

ADMK Poster
பெரம்பலூரில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்களை போலீஸார் கிழித்ததால் பரபரப்பு எழுந்த நிலையில் திமுகவை விமர்சித்து அதிமுகவினர் ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.



மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள், கூட்டணி என அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. அதிமுகவில் பல கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும் இன்னும் எதுவும் உறுதியாகவில்லை. ஆனாலும் அதிமுக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

சமீபமாக தமிழகத்தில் போதைப்பொருள் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டு அதிமுகவினர் ‘Say No Drugs, Say No to DMK’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். இதுதொடர்பாக பல இடங்களில் போஸ்டர்களும் ஒட்டத் தொடங்கியுள்ளனர்


இந்நிலையில் பெரம்பலூர் மற்றும் வடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிமுக விளம்பரக் குழு சார்பில் பல இடங்களில் கைதான ஜாபர் சாதிக் உடன் திமுகவினர் இருப்பதான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால் போஸ்டர் ஒட்டக்கூடாது என சொல்லி போலீஸார் தடுத்ததால் அதிமுகவினர் போலீஸார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் போலீஸார் ஏற்கனவே ஒட்டியிருந்த போஸ்டர்களையும் அகற்றியதாக கூறப்படுகிறது.

இது ஆளும் திமுக அரசு அதிமுகவை ஒடுக்குவதற்காக செய்யும் வேலை என அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர் மேலும் சமூக வலைதளங்களில் #Resign_Stalin #Resign_Udhayanidhi என்ற ஹேஷ்டேகுகளையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Edit by Prasanth.K