வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 26 ஜூலை 2018 (12:32 IST)

சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண் போலீஸ் : ஊழியர்களை தாக்கிய கணவர் கைது

சென்னை எழும்பூர் பகுதியில் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 
சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் நந்தினி. இவர் நேற்று எழும்பூரில் உள்ள நீல்கிரீஸ் சூப்பார் மார்கெட் கடைக்கு சென்றுள்ளர். அப்போது, செல்போனில் பேசியபடியே, ஒரு சாக்லேட்டை எடுத்து தன் சட்டைப்பையில் போட்டுள்ளார். மேலும், வேறொரு பொருளை எடுத்து கொடுத்து அதற்கு மட்டும் பில் போடுங்கள் என கூறியுள்ளார்.
 
ஆனால், அவர் திருடையதை ஏற்கனவே சிசிடிவி கேமராவில் பார்த்த கடை ஊழியர்கள், உங்கள் சட்டையில் இருப்பதை வெளியே எடுங்கள் எனக்கூற, நான் எதுவும் திருடவில்லை என நந்தினி தொடர்ந்து மறுத்துள்ளார். எனவே, அங்கிருந்த இரு பெண் ஊழியர்கள் அவரை சோதனை செய்து அவரது சட்டையில் இருந்த சாக்லேட்டை வெளியே எடுத்தனர். அதன் பின் இனிமேல் திருட மாட்டேன் என காகிதத்தில்  அவரிடம் எழுதி வாங்கி விட்டு அவரை அனுப்பிவிட்டனர்.
 
இதை அறிந்த நந்தினியின் கணவர் சில நபர்களுடன் அங்கு வந்து போலீஸ் என தெரிந்தும் என் மனைவியை சோதனையிடுவீர்களா? எனக்கேட்டு அங்கிருந்த கடை ஊழியர்களை தாக்கியுள்ளார். இந்த காட்சியும் சிசிடிவி கேமராவில் பதிவானது. 
 
இதையடுத்து, நந்தினியை சஸ்பெண்ட் செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். மேலும், கடை ஊழியர்களை தாக்கிய அவரின் கணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
 
காவல் அதிகாரியே இப்படி சூப்பர் மார்க்கெட்டில் திருடிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.