1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (17:02 IST)

பிரம்மன் ஊழல் செஞ்சுட்டேன்.... மொத்த பேருக்கும் கொடுக்க வேண்டிய அழகை உனக்கு மட்டும் கொடுத்திருக்கிறான்!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பேமஸ் ஆனவர் நடிகை ஷெரின். ஆனால் அவர் இதற்கு முன் சிறுவயதாக இருந்தபோதே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். “அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலில் ஷெரின் எஸ்பிரஷனில் பலரும் மயங்கியதுண்டு.
 
அதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ளார். தனுஷின் முதல் படமான இதில் ஷெரின், அபிநய்,ரமேஷ் கண்ணா,தலைவாசல் விஜய்,விஜயகுமார், ஷில்பா போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்தாலும் அவரை பிரபலப்படுத்தியது என்னமோ பிக்பாஸ் நிகழ்
ச்சி தான்.
 
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஷெரினிக்கு அழகு கூடிக்கொண்டே போகிறது. ஆம், பிக்பாஸில் இருந்ததைவிட தற்போது உடல் எடை குறைத்து ஒல்லியாகிவிட்டார். அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் ஷெரின் தற்போது  குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்ற புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். இதற்கு ஒருவர், அந்த பிரம்மன் கூட ஊழல் பேர் வழிதான் போல, மொத்த பேருக்கும் கொடுக்க வேண்டிய அழகை, உன் ஒருவளுக்கே கொடுத்திருக்கிறான் என கூறியுள்ளனர்.