வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (08:34 IST)

சென்னையில் விடிய விடிய கனமழை.. ஏரிகளுக்கு வரும் நீர் அளவு அதிகரிப்பு..!

lake
சென்னையில் நேற்று மதியம் முதலே மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வந்தாலும் நேற்று இரவு பல இடங்களில் கன மழை கொட்டியதால் சாலைகளில் மழை நீர் இறங்கி உள்ளது. 
 
இந்த நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி ஏரிக்கு  வினாடிக்கு 1250 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 35 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் 32 அடிக்கும் மேலாக தற்போது தண்ணீர் உள்ளது என்பதால் இந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் குடிநீர் தேவைக்காக பராமரிக்கப்பட்ட புழல் ஏரிக்கு வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும் குழாய் மூலம் 40 கன அடி தண்ணீர் இந்த ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
இன்னும் ஒரு சில நாட்களுக்கு சென்னையில் மழை பெய்யும் என்பதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva