தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் கூட்டணி; நெல்லையில் தனித்தனி..! – திமுக, காங். கூட்டணி!
- தமிழ் தேர்வு எழுதினால்தான் காவலர் பணி! – சீருடை பணியாளர் தேர்வாணையம்!
- அதிமுகவிற்கு கூட்டணி அழைப்பு விடுத்த மு.க.ஸ்டாலின்! – 37 கட்சிகளுக்கு கடிதம்!
- தேர்தல் களத்தில் திருநங்கைகளை இறக்கிய கட்சிகள்! – பரபரக்கும் தேர்தல்!
- லஞ்சத்தை ஒழிக்க சிசிடிவி கேமரா… வழக்கு தொடர்ந்த நபருக்கு அபராதம்!
திமுகவுக்கு ஜம்ப் அடித்த அதிமுக வேட்பாளர்! – அதிர்ச்சியில் அதிமுக!
தமிழக நகர்புற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் திமுகவிற்கு கட்சி தாவியது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல் வெளியீடு என சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.
அதேசமயம் இந்த தேர்தலில் பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் பலர் பல்வேறு கட்சிக்கு தாவி வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் ஆம்பூர் 14வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக தமிழருவி என்பவரை அதிமுக அறிவித்திருந்தது. இவரை எதிர்த்து திமுகவிலிருந்து ஆம்பூர் திமுக நகர செயலாளர் ஆறுமுகம் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நேற்று அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழருவி இன்று தனது போட்டி வேட்பாளரான ஆறுமுகம் தலைமையில் திமுகவில் சென்று இணைந்துள்ளார். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் வேட்பாளரே கட்சி தாவியது அதிமுகவை அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
