1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 16 நவம்பர் 2018 (16:17 IST)

ஒசூர் அருகே இளம் காதல் ஜோடி படுகொலை...

ஒசூரைச்சேர்ந்த காதல் ஜோடி அடித்துக்கொலை,செய்யப்பட்டு  உடல்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி ஆற்றில் மீட்கப்பட்டது.கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை உட்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சூடுகொண்ட பள்ளியை சேர்ந்த நந்திஷ்,அதே பகுதியை சேர்ந்த சுவாதி ஆகியோர் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்டில் வீட்டை எதிர்த்து  பதிவு திருமணம் செய்துகொண்டனர். ஆனால் சில தினங்களுக்கு முன்பு இருவரும் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.
 
இன்று இவர்கள் இருவரின் உடலையும் கர்நாடக போலீஸ் மீட்ட நிலையில் குற்றவாளிகளை கிருஷ்ணகிரி போலீஸார் கைது செய்தனர்.
 
காதலர்களை கொன்று விட்டு அவர்களின் கை,கால்களை கொலையாளிகள் காவிரியில் வீசியதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
 
பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால் பெண்ணின் குடும்பத்தினர் இந்தக்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் விசாரிக்கின்றனர்.
 
கொலைதொடர்பாக பெண்ணின் சித்தப்பா வெங்கடேஷ்,உறவினர் கிருஷ்ணன்  ஆகியோர் கைது.
 
இருவரும், வேறு வேறு வகுப்பினர் என்பதால்தான் இந்த ஆவணக்கொலை நடந்திருப்பதாக தகவல் வெளியாகின்றன.
 
கர்நாடகா மாநிலத்திலுள்ள மாண்டியா அருகே மலஹன்பள்ளியில் உள்ள காவிரியில் காதலர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் கடந்த ஆக்ஸ்ட் மாதம் தான் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் வாழ விடாமல் இளம் காதல் ஜோடியை பெண்ணின் குடும்பத்தார் கொலை செய்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.