வார்னிங்: வருகிறது அடுத்த ஆபத்து; சென்னை வானிலை மையம்!
தமிழகத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய கஜா புயல், தற்போது கேரளாவை நோக்கி சென்றுள்ளது. அங்கிருந்து அரபிக் கடல் பக்கம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது பின்வருமாறு,
தற்போதைய நிலவரப்படி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வரும் 18 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.
இது, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கப்பகுதியில் நிலவக்கூடும். மீனவர்கள் இன்று மதியம் முதல் கடலுக்கு செல்லலாம்.
வரும் 18 ஆம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியிலும் 19, 20 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.