ஐபிஎல் விவகாரம்; இயக்குநர் பாரதிராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

speech
Last Updated: ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (13:07 IST)
சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கலவரத்திற்கு இயக்குநர் பாரதிராஜா தான் காரணம் என முகநூலில் தகவல் வெளியானதையடுத்து பாரதிராஜாவின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீஸார் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனால் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் தெரிவித்திருந்தனர்.
 
ஆனாலும் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிராஜா உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் அனைத்தும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
 
இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டி தடைக்கு பாரதிராஜா தான் காரணம் என முகநூலில் தகவல் பரவி வருகிறது. இதனால் அசம்பாவிதங்களை தடுக்க பாரதிராஜாவின் வீடு, அலுவலகங்களுக்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :