செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (16:34 IST)

மனைவியை துன்புறுத்திய புகார்: ஷமிக்கு சம்மன் அனுப்பியது போலீஸ்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அவரை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த மாதம் ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான், தனது கணவர் கொடூரமானவர். அவர் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளார். ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு வருடங்களுக்கு மேலாக தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார்கள் என கொல்கத்தா காவல்துறைக்கு புகார் கொடுத்தார். இதனையடுத்து, போலீசார் அவர் மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
 
இது தொடர்பாக அவர் போலீஸுக்கு புகார் கொடுத்தது மட்டுமல்லாமல் கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜியிடமும் நேரில் சென்று முறையிட்டார். மேலும், கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தார்.
 
இந்நிலையில், தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் ஷமியை இன்று கொல்கத்தா போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.