ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 22 டிசம்பர் 2021 (18:07 IST)

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு: சசிகலா அண்ணன் மகனிடம் விசாரணை!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் இடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்கள் திருடு போன தாகவும் கூறப்பட்டது. 
 
இதுகுறித்து ஏற்கனவே பலரிடம் விசாரணை செய்த காவல்துறையினர் தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் இடம் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் சசிகலாவையும் விசாரணை செய்ய காவல் துறையினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது