சொந்த கட்சி பெண்ணை ஏமாற்றிய பாஜக நிர்வாகி
பாஜக மாவட்ட செயலாளர் தன்னை ஏமாற்றிய பண மோசடி செய்ததாக பாஜக மகளிர் நிர்வாகி புகார் அளித்துள்ளார்.
பாஜக மாவட்ட செயலாளராக இருந்த பொன் பாஸ்கர் என்பவர் தன்னை ஏமாற்றி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக கூறி பாஜக மகளிர் அணி நிர்வாகி வளர்மதி என்பவர் சென்னை ஆவடி ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், கொலைமிரட்டல் விடுத்த பாஜக நிவாகிகள் 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக அவர் இதுகுறித்து பாஜக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் கட்சித் தலைமை எடுக்காத நிலையில், பாஜக மகளிர் அணி நிர்வாகி வளர்மதி காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.