1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 30 டிசம்பர் 2021 (13:15 IST)

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார்: சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏவிடம் விசாரணை!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் குறித்து சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் இடம் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
ஆவின் பால் துறையில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ராஜேந்திர பாலாஜி தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவரை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகார் தொடர்பாக சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மனிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 
 
விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.