திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (10:03 IST)

அண்ணா சாலையில் வீலிங்: இன்ஸ்டா பிரபலத்தை பிடிக்க தீவிரம்!

சென்னை அண்ணா சாலையில் சாகசம் செய்த இளைஞரை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.

 
நேற்று காலை சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்றான அண்ணா சாலையில் திடீரென ஒருவர் இளைஞர் படுவேகமாக ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கினார்.

சாலையில் வளைந்து வளைந்து இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த அந்த இளைஞர் பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தினார். சென்னை அண்ணா சாலையில் இருந்து ஜெமினி மேம்பாலம் வரை அந்த இளைஞர் செய்த சாகசம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே சென்னை பைக் சாகசத்தில் ஈடுபட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் அலெக்ஸ் பினோயை பிடிக்க தனிப்படை போலீசார் ஐதராபாத் விரைந்ததுள்ளனர்.

முன்னதால இவ்விவகாரத்தில், கல்லூரி மாணவர்கள் 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டதை அடுத்து போலீஸ் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.