1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (19:38 IST)

நீட் தேர்வில் 720க்க்கு 503 மதிப்பெண் எடுத்த சென்னை அரசுப்பள்ளி மாணவர்!

NEET
அரசுப்பள்ளியை சேர்ந்த மாணவர் ஒருவர் நீட் தேர்வில் 720க்கு 503 மதிப்பெண் எடுத்து சாதனை செய்துள்ளார்
 
சென்னை குரோம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த சுந்தர்ராஜன் என்ற மாணவர் இந்த ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வு எழுதினார்
 
எந்தவிதமான கோச்சிங் சென்டர் செல்லாமல் இருந்த நிலையில் மாணவர் சுந்தர்ராஜன் 700 மதிப்பெண்களுக்கு 503 மதிப்பெண்கள் பெற்று சாதனை செய்துள்ளார்
 
தனக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பது தான் கனவு என்றும் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நான் லட்சியத்துடன் படித்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் நீட்தேர்வு கடினமானது அல்ல என்றும் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றும் நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தயவு செய்து தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்