1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 26 நவம்பர் 2021 (16:24 IST)

பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட எம் எல் ஏ மீது வழக்குப்பதிவு!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 67 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் ஈழத்துக்கான போராடியவருமான பிரபாகரன் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் போது கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஆண்டுதோறும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் அவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவரின் 67 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இது சம்மந்தமாக நேற்று சென்னையில் ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவில் நடந்த தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் பன்ரூட்டி எம் எல் ஏ வேல்முருகன் கலந்துகொண்டு கேக் வெட்டினார். இந்நிலையில் இந்நிகழ்ச்சி அனுமதி பெறாமல் நடந்ததாகக் கூறி ஐஸ்ஹவுஸ் போலிஸார் வேல்முருகன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.