1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 16 மே 2024 (11:30 IST)

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

Jayakumar
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் குறித்து விசாரிக்க கூடுதல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்துவரும் நிலையில் புதிய அதிகாரிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
பல்வேறு கொலை கொள்ளை வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை செய்த அதிகாரிகள் இந்த தனிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் இந்த வழக்கில் துப்பு துலங்காததால்10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
 
நெல்லை உள்ளிட்ட 3 மாவட்ட தடய அறிவியல் துறையினர் ஆவணங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர் என்றும், ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
போலீசாரின் இந்த தீவிர நடவடிக்கையை அடுத்து நெல்லை ஜெயக்குமாரை கொலை செய்த மர்ம கும்பல் வெகு சீக்கிரம் பிடிபடும் என்றும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
Edited by Siva