ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஜனவரி 2024 (17:41 IST)

காவல்துறை அதிகாரிகள் 11 பேர் அதிரடியாக இடமாற்றம்..! திருப்பூர் எஸ்.பி பணியிட மாற்றம்..!!

tn govt
தமிழ்நாடு முழுவதும் 11 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருப்பூர் எஸ்.பி. சாமிநாதன் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக தமிழ்நாட்டில் பணியாற்றி வந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பாக்ரேலே சேப்பஸ் கல்யாண் வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
கொளத்தூர் பகுதி இணை ஆணையராக இருந்த சக்திவேல் சிபிசிஐடி கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நுண்ணறிவு பிரிவு கண்காணிப்பளராக இருந்த பாண்டியராஜன் கொளத்தூர் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சாமிநாதன் வடக்கு மண்டல தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஊழல் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளராக இருந்த சாம்ராதேவி நுண்ணறிவு பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு வடக்கு மண்டல கண்காணிப்பாளராக இருந்த சரவணகுமார் அதே பிரிவில் தெற்கு மண்டலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர் சட்டம் ஒழுங்கு தடுப்பு காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 
சென்னை அண்ணாநகர் இணை ஆணையராக செயல்பட்டு வந்த ரோகித் நாதன் ராஜகோபால் கோயம்புத்தூர் வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 
கோயம்புத்தூர் போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்த ராஜராஜன் திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை வடக்கு இணை ஆணையராக பணியாற்றி வந்த ஜி.எஸ் அனிதா திருநெல்வேலி காவலர் குடியிருப்பு இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.