1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (13:41 IST)

வடபழனியில் போலிஸ் தற்கொலை – பணிச்சுமையா ? குடும்பத் தகராறா ?

வடபழனியில் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர், தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியக் கிளப்பியுள்ளது.

சமீபகாலமாக தமிழகத்தில் பணிச்சுமை மற்றும் உயர் அதிகாரிகளின் தொல்லைக் காரணமாக காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகமாகிக் கொண்டே போகிறது. அந்த வரிசையில் சென்னை, வடபழனியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் பணி உயர்வு கிடைத்துள்ளது. இதற்கான பயிற்சி ஜூலை 1 முதல் பரங்கிமலை பயிற்சி பள்ளியில் நடந்து வந்துள்ளது. ஆனால் அந்த பயிற்சிக்கு முதல் இரண்டு நாட்கள் மட்டுமே சென்ற சேகர் அதன் பின் ஐந்து நாட்களாக வீட்டிலேயே இருந்துவந்துள்ளார்.

இன்றும் வீட்டிலேயே தங்கிய சேகர் மனைவி மற்றும் மகன் இருவரும் வெளியே சென்றபின் தனது கழுத்தில் கத்தியால் வெட்டிக்கொண்டு உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வடபழனி காவல் துறையினர் சேகர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்..சேகரின் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா அல்லது குடும்பத்தகராறா எனப் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.