வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 2 செப்டம்பர் 2024 (16:03 IST)

ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் ஒரு காவல்துறை மையம்: தமிழ்நாடு மருத்துவத்துறை

hospital
மேற்கு வங்கம், கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக தமிழ்நாடு மருத்துவத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
 
மருத்துவமனைகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்குனர் ராஜமூர்த்தி புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
 
மருத்துவமனைகளில் கண்டிப்பாக ஒரு காவல்துறை மையம் அமைக்க வேண்டும்
 
மருத்துவமனை பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஆலோசனை மற்றும் பாதுகாப்பு என 2 கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும்
 
மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்”
 
மருத்துவமனையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்;
 
பார்வையாளர்களுக்கு என அடையாள அட்டை கொடுக்க வேண்டும்;
 
மருத்துவமனையில் இரவு நேரங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனைகளை சுற்றி மின் விளக்குகள் அமைக்க வேண்டும்;
 
மருத்துவ பணியாளர்களை தாக்கினால் மருத்துவ பணியாளர்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பதாகையை வைக்க வேண்டும்”
 
Edited by Siva