திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 ஜூலை 2020 (17:44 IST)

வித விதமாய் ஸ்டிக்கர்; டிமிக்கி கொடுத்த டகால்டிகள் மீது வழக்கு!

போலியாக அனுமதி சீட்டு ஒட்டி வந்த 94 நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
 
கொரோனாவை கட்டுப்படுத்த சென்னையில் கடந்த ஜூன் 19 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்த பொதுமுடக்க விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில் பத்திரிகை துறை, காவல்துறை, மாநகராட்சி, கோவிட் பணி என போலியாக அனுமதி சீட்டு ஒட்டி வந்த 94 நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும்  கடந்த 13 நாட்களில் மட்டும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக கூறி 84,355 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.