திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 2 ஜூலை 2020 (16:55 IST)

கொரொனாவுக்கு பயந்து இளைஞர் விபரீதம் !

இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 90 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரொனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  கொரொனா தொற்று அச்சத்தால் ஒரு இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், இருகூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரத்தில் வசித்து வருபவர் கண்ணன் (21). இவர்  ஒரு தனியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அதனால் தனக்கு கொரொனா தொற்று வந்துவிட்டதாக நினைத்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவர் கூறியுள்ளார்.

பின்னர், இன்று காலையில் சரக்கு ரயில் மோதி ஒரு இளைஞர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது.  அப்போது வீட்டை விட்டு வெளியில் சென்றதாக கண்ணனை அவரது வீட்டார் தேடி வந்துள்ளனர்.

அங்கு சென்ற பார்த்த அவர்கள் ரயிலில் தற்கொலை செய்தது கண்ணன் என அடையாளம் காணப்பட்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.