1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 அக்டோபர் 2024 (13:50 IST)

கனமழையில் மாநாடு.. தவெகவுக்கு சில கேள்விகள் கேட்ட காவல்துறை..!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் வரும் 27ஆம் தேதி கனமழையின் போது எப்படி மாநாட்டை நடத்துவீர்கள் என தமிழக வெற்றி கழகத்திற்கு விக்கிரவாண்டி காவல்துறை ஐந்து கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இம்மாநாட்டில் சுமார் 1.5 லட்சம் பேரின் பங்கேற்பு எதிர்பார்க்கப்படுவதுடன், சுமார் 50,000 நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும் என தகவல் தரப்பட்டுள்ளது. மேலும், வாய்மொழி தகவலின் அடிப்படையில் 1,50,000 பேர் வரை இந்த மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பொதுமக்களும், ரசிகர்களும் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி மாநாட்டுக்கு வருவார்கள் எனவும் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

மாநாட்டில் பங்கேற்க தெற்கு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக, விழுப்புரம் - சென்னை சாலையின் இடதுபுறத்தில் 28 ஏக்கர் இடமும், கூடுதலாக 15 ஏக்கர் பரப்பளவிலும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வடதமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு, சென்னை - விழுப்புரம் சாலையின் ஓரத்தில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பு வாகன நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எல்லா பகுதிகளிலும் வாகன நிறுத்தம் தொடர்பான திட்டத்தை (Vehicle Parking Plan) வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாநாட்டின் போது வடகிழக்கு பருவமழையால் அதிக மழை பெய்தால், நிறுத்துமிடங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலை ஏற்படக்கூடும். அப்படிப்பட்ட சூழலில், வாகனங்களை எவ்வித சிரமமும் இல்லாமல் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றிய விரிவான விளக்கத்தை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து வரவுள்ள வாகனங்கள் (பேருந்து, வேன், கார்) பற்றிய முழுமையான விவரங்களை வழங்குமாறும் குறிப்பிட்டுள்ளனர்.’

Edited by Siva