1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 அக்டோபர் 2024 (13:36 IST)

எங்கேயுமே தண்ணி தேங்கலைன்னு சொல்லித் திரியுற வெட்கம் கெட்ட அமைச்சருங்க: நடிகை கஸ்தூரி

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் ஆளுங்கட்சி  சார்பான ஊடகங்கள் மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் சென்னையின் எந்த பகுதியிலும் மழைநீர் தேங்கவில்லை என்றும் அனைத்து சுரங்க பாதைகளும் போக்குவரத்துக்கு தகுந்ததாக இருப்பது என்றும் பேட்டி அளித்து வருகின்றனர்.

இது குறித்த செய்திகளும் ஊடகங்களை வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் உண்மை நிலவரம் அப்படி இல்லை என்றும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி கொண்டு இருக்கிறது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

எங்க ஏரியா. இப்போ. வீட்டுக்குள்ள தண்ணி வேகமா புகுந்துக்கிட்டு வருது. முன்கூட்டி எச்சரிச்சதுனால கொஞ்சம் prepare ஆயிட்டோம், ஆனாலும் damage தான். எங்கேயுமே தண்ணி தேங்கலைன்னு  சொல்லித் திரியுற வெட்கம் கெட்ட அமைச்சருங்க, டிவி, ஊடகம் யாராச்சும் அகப்பட்டீங்க....


Edited by Siva