புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: செவ்வாய், 8 மே 2018 (17:31 IST)

இனிமேல் வண்டலூர் ஜூ போக வேண்டிய அவசியமில்லை: ஏன் தெரியுமா?

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்று வண்டலூர் உயிரியல் பூங்கா. 602 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த பூங்காவில் சுமார் 2000க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் உள்ளன. இந்த விலங்குகள் முறையாக பராமரிக்கப்படுகிறது. 
 
இந்த வண்டலூர் பூங்காவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதிலும் விடுமுறை நாட்களில் காலை முதல் மாலை வரை அதிக கூட்டம் இருக்கும்.
 
இந்த நிலையில் இனிமேல் இந்த பூங்காவில் உள்ள உயிரினங்களை பார்க்க நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை. இதற்காக பூங்கா நிர்வாகத்தினர் வண்டலூர் ஜூ' என்ற செயலியை உருவாக்கியுள்ளனர்.
 
இந்த செயலியை நம்முடைய ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும், நேரலையாக வண்டலூர் பூங்காவில் உள்ள உயிரினங்களை செல்போனில் பார்த்து மகிழலாம். செலவில்லாமல், பூங்காவை கால்கடுக்க சுற்றி வராமல் இந்த பூங்காவை வீட்டில் உட்கார்ந்த நிலையில் பார்த்து ரசிக்கலாம். இந்த பூங்காவில் உள்ள உயிரினங்கள் நேரலையில் தோன்றும் வகையில் சுமார் 14 சிசிடிவி கேமிராக்கள் வைக்கப்பட்டு செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியை டவுன்லோடு செய்ய வேண்டுமா? இதோ அதன் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.aazp