1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (09:20 IST)

நள்ளிரவு டூ விலர் திருடனை பிடித்த போலீஸார்!

மதுரை அலங்காநல்லூரில் பகுதிகளில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களை திருடி செல்லும் வாலிபர் கைது. 

 
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் இரவு நேரங்களில் வீடுகள், கடைகள் முன்நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் திருட்டு போயின. கடந்த மாதம் அலங்காநல்லூர் பகுதியில் கடை முன்நிறுத்தப்பட்டிருந்த கார்த்திக் என்பவருக்கு சொந்தமான விலை உயர்ந்த பஜாஜ் பல்சர் என்ற இருசக்கர வாகனத்தை வாலிபர்கள் திருடி செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. 
 
இரு சக்கர வாகனங்களை குறிவைத்து ஒரு கும்பல் திருடி வருவது தொடர்பாக அலங்காநல்லூர் போலீசாருக்கு புகார்கள் குவிந்தது. போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாக கொண்டு இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 
 
இந்த நிலையில் இருக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நிலக்கோட்டையை சேர்ந்த தமிழ் பாண்டி (20) என்ற வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடமிருந்து திருடப்பட்ட இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலிசார் தப்பியோடிய மற்ற இருவாலிபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.