ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 மார்ச் 2024 (11:07 IST)

மதுரையில் ரூ.180 கோடி மதிப்பு போதைப் பொருள் கடத்தியவரின் மனைவியும் கைது: பரபரப்பு தகவல்..!

சென்னையில் இருந்து மதுரைக்கு சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 180 கோடி மதிப்பு போதைப் பொருள் கடத்திய நபர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாகி வரும் நிலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஒன்றாம் தேதி போதைப்பொருள் கடத்தியதாக பிரகாஷ் என்ற 42 வயது நபர் கைது செய்யப்பட்டார் 
 
அவரிடம் இருந்து 30 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவருடைய வீட்டில் சோதனை செய்தபோது வீட்டிலும் அவர் போதை பொருள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரது மனைவி மோனிஷா என்பவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது 
 
போதைப் பொருளை தென் மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்காக நியமிக்கப்பட்டவர் தான் பிரகாஷ் என்பதும், அவருக்கு வேலை கொடுத்தது யார் என்பது குறித்து கண்டுபிடிக்க தீவிர முயற்சி செய்து வருவதாகவும் தென் மாவட்டங்களில் இருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுவதாகவும் முதல் கட்ட விசாரணை தெரிய வந்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
Edited by Mahendran