செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஏப்ரல் 2024 (12:48 IST)

உங்க பாட்டனையே பார்த்த கட்சி அதிமுக.. ஆணவத்துல பேசாதே.. அண்ணாமலைக்கு ஈபிஎஸ் பதிலடி..!

2024 ஆம் ஆண்டு அதிமுக அழிந்து விடும் என்றும் அதிமுக, தினகரன் கைவசம் சென்று விடும் என்றும் அண்ணாமலை கூறிவரும் நிலையில் அதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார். 
 
அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது ஏனென்றால் இது தெய்வத்தால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இல்லை என்றால் தமிழ்நாட்டில் சமூக நீதி தோன்றியிருக்காது என்றும் ஏழை எளிய மக்கள் இன்று நிம்மதியோடு வாழ்கிறார்கள் என்றால் அதற்கு அடித்தளம் போட்டது அதிமுக தான் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 
 
அதிமுகவை அழித்து விடுவோம் என்று சொன்ன பல பேரை நாங்கள் பார்த்து விட்டோம் என்றும் உங்க பாட்டனையே பார்த்த கட்சி அதிமுக என்று எனவே ஆணவத்தில் பேசாதீர்கள் என்றும் அண்ணாமலைக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். 
 
மேலும் அதிமுக பெருமைகளை அவர் வரிசைப்படுத்திய நிலையில் பாரதிய ஜனதா கட்சி தங்களது சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க வேண்டுமே தவிர இன்னொரு கட்சியை அழிக்க வேண்டும் என்று நினைக்க கூடாது என்றும் அப்படி நினைத்தால் அவர்கள் தான் அழிந்து போவார்கள் என்றும் பேசினார். அவருடைய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran