செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 31 டிசம்பர் 2018 (10:16 IST)

புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து காவல்துறை எச்சரிக்கை...

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்களது லைசென்ஸ் உடனடியாக ரத்து செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மாநகரத்தில் வருடம்தோறும் வருடத்தின்  இறுதிநாள் இரவு வேளையில் புதுவருட கொண்டாட்டம் படு ஜோராக இருக்கும். தற்போது எல்லோரும் நவீன உலகில் வாழ்ந்து வருவதால் 2019 ஆம் ஆண்டை வரவேற்ற மக்கள் பெரும் ஆவலாய் உள்ளனர்.
 
புதுவருட கொண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும் இளைஞர்கள், சிலர் குடித்துவிட்டு என்ஜாய் என்ற பெயரில் செய்யும் அலப்பறைகளால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் பல தீங்குகள் ஏற்படுகிறது.பல விபத்துகள் நேருடுகின்றன.
 
எனவே இன்று இரவு மற்றும் நாளைக்கு எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதிருக்க போலீஸார் பல்வேறு எச்சரிக்கை விடுத்துவருகின்றன.
 
இதில் குறிப்பாக, ’இளைஞர்கள் பைக் ரைடு போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என்றும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் உடனடியாக அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் இதனால் பின்நாட்களில் பாஸ்போர்ட், விசா போன்றவை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.