1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. unexpected Rain in chennai

சென்னையில் திடீர் மழை- மக்கள் மகிழ்ச்சி !!!

சென்னை மழை
சென்னையில் இன்று காலையில் இருந்து குளிர்ந்த வானிலையாக இருந்ததை அடுத்து இப்போது ஆங்காங்கே மழைப் பெய்துவருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் வறண்ட வானிலையும், இரவில் லேசான குளிரும்  நிலவி வந்தது. ஆனால் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது.

அதையடுத்து தற்போது சென்னையில் சிலப் பகுதிகளில் மழைப் பெய்து வருகிறது. கோடம்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு ஆகியப் பகுதிகளில் நிலம் நனையும் அளவிற்கு மழை பெய்துள்ளது. மேலும் சென்னையின் வேறு சிலப் பகுதிகளிலும் லேசான மழைப் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
அடுத்த கட்டுரையில்
இசையமைப்பாளரை காதலிக்கிறாரா நடிகை மடோனா?