வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (15:59 IST)

தெரியாத நபர்களிடம் இருந்து அனுப்பப்படும் பணம்.. உஷாராக இல்லையென்றால் மொத்த பணமும் காலி..!

தெரியாத நபர்களிடமிருந்து ஜிபி மூலம் பணம் வந்தால் உஷாராக இருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் நமது பங்கு கணக்கில் உள்ள மொத்த பணமும் காலியாகிவிடும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் வங்கி கணக்கில் பணம் அனுப்பப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தி வரும் என்றும் அந்த குறுஞ்செய்தியுடன் ஒரு லிங்க் இருக்கும் என்றும் அந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைலில் உள்ள தகவல்கள் திருடப்படும் என்றும் எனவே தெரியாத நபர்களிடமிருந்து பணம் வருவதாக வரும் செய்தியில் உள்ள லிங்கை கிளிக் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஜிபே கணக்கின் மூலம் "நான் தெரியாமல் பணம் அனுப்பிவிட்டேன், அந்த பணத்தை திருப்பி அனுப்புங்கள்" என்று உங்களுக்கு மர்ம நபர் போன் செய்வார். அந்த கோரிக்கையை ஏற்று, அவருடைய ஜிபே கணக்கை கிளிக் செய்தால், உடனடியாக உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் கொள்ளையடிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, பணம் அனுப்பியவர்கள், உங்களை போனில் அழைத்தால், அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு அடையாள அட்டையுடன் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறவேண்டும் என காவல்துறை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாளுக்கு நாள் சைபர் கிரைம் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையின் இந்த அறிவுரையை ஏற்று நடக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Mahendran