செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (10:04 IST)

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி!

சென்னை திருமுல்லைவாயிலில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
சென்னை திருமுல்லைவாயிலில் தரைத்தளத்தில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். விஷ வாயு தாக்கி வீட்டின் உரிமையாளர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 
 
சிவசக்திநகரில் சம்புவிலிருந்து விஷ வாயு தாக்கியதில் பிரமோத், பிரேம்குமார், தந்தை பிரதீப் குமார் ஆகியோர் இறந்தனர். மேலும் தரைத்தள தண்ணீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிருக்கு போராடிய சாருநாதனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.