1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 ஜூலை 2025 (14:29 IST)

என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது.. டாக்டர் ராமதாஸ் திடுக் தகவல்..!

என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது.. டாக்டர் ராமதாஸ் திடுக் தகவல்..!
என் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
 
இன்று விருத்தாச்சலத்தில் டாக்டர் ராமதாஸ், செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘எனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டு இருந்தது. அதுவும் நான் இருக்கும் இடத்தில்  அந்த கருவி வைக்கப்பட்டிருந்தது. 
 
இந்த கருவி லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்டது. இந்த கருவி மூலம் எனது வீட்டில் நான் பேசுவதை எல்லாம் கவனித்து இருக்கிறார்கள்’ என்றும் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
 
ஏற்கனவே, டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் இருக்கும் நிலையில், திடீரென, இப்படியொரு குற்றச்சாட்டை அவர் முன் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
 
இருப்பினும் ஒட்டு கேட்கும் கருவியை வைத்தது யார் என்பதை டாக்டர் ராமதாஸ் வெளிப்படையாக சொல்லவில்லை.
 
Edited by Mahendran