வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2021 (12:08 IST)

கூட்டணி தொடர்பாக முதல்வரை சந்திக்கிறார் ராமதாஸ்!

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு!
 
இன்று மாலை 4 மணிக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வருடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். 
 
இந்த சந்திப்பில் வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் மற்றும் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருப்பதாக வெளியான தகவல்கள் கூறுகிறது. மேலும், வன்னியர்களுக்கான 20% உள்ஒதுக்கீடு கேட்டு முதலமைச்சருடன் ராமதாஸ் பேச்சு நடத்த உள்ளார் என்பது கூடுதல் தகவல்.