1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 17 அக்டோபர் 2020 (09:04 IST)

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்னதான் மரியாதை?

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா, கவர்னர் ஆட்சியா? பாமக தலைவர் ராமதாஸ் ட்விட்டரில் கேள்வி.
 
மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு தற்போது வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பாமக தலைவர் ராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 
 
மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றி 32 நாட்களாகியும் இன்னும் தமிழக கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தானாக ஏற்பட்ட தாமதம் அல்ல. திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தாமதம். 
 
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை கவர்னரால் தடுக்க முடியும் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன தான் மரியாதை? தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா, கவர்னர் ஆட்சியா? என்ற வினாவுக்கு உடனடியாக விடை காணப்படவேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.