தொடர்புடைய செய்திகள்
- திமுகவில் சேரமாட்டேன்..ஆனால்? தங்க தமிழ்செல்வனின் டிவீட்டால் ஆடிப்போன தினகரன்
- திருட்டு கனெக்ஷன் எடுத்த திமுக: ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய அமைச்சர் ஜெயகுமார்
- அதிமுக வலையில் வீழ்ந்த தங்கத்தமிழ்ச்செல்வன்? காலியாகும் அமமுக!
- தி.மு.க. பாணியில் அ.ம.மு.க. எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் அ.தி.மு.க. !
- அதிமுக வலையில் வீழ்ந்த தங்கத்தமிழ்ச்செல்வன்? காலியாகும் அமமுக!
திமுக கூட்டணியில் பாமக? அப்ப திருமாவளவன் நிலைமை?
சமீபத்தில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழா, காங்கிரஸ்-திமுக கூட்டணியை உறுதி செய்துவிட்டதால் இந்த கூட்டணியில் இணைய மேலும் சில கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திமுகவை கடந்தசில ஆண்டுகளாக கடுமையாக விமர்சனம் செய்த கட்சிகள் கூட தற்போது இந்த கூட்டணியில் சேர விரும்புகின்றன.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இணைய பாமக விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்பு இல்லை, தனித்து நின்றாலும் அதிகபட்சம் அன்புமணி மட்டுமே வெற்றி பெறுவார். எனவே திமுக கூட்டணியில் இணைந்தால் ஐந்து தொகுதிகள் வரை வெற்றி பெற்று மத்தியில் அமைச்சர் பதவியும் பெறலாம் என்ற எண்ணம் பாமகவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் பாமகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை அந்த கட்சி பெற்றுவிட்டால், அந்த கட்சியால் திமுகவுக்கு என்ன லாபம்? என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் திமுக கூட்டணியில் பாமக இணைந்துவிட்டால் திருமாவளவன் நிலைமை சிக்கலாகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
